Tuesday, May 3, 2011

என்னை மயக்கிய கீதங்கள்...

வணக்கம் நண்பர்களே!!!

பல்வேறு தருணங்களில் பல்வேறு பாடல்கள் நம்மை மயக்கும்... இங்கு எனக்கு பிடித்த, என்னை மயக்கிய சில பாடல்கள் தொகுக்கப்பட இருக்கிறது.... திரை இசை பாடல்கள், தனிப்பாடல்கள், பக்திபாடல்கள், கர்நாடக இசை பாடல்கள் என கலவையான ரசனையாக இருக்கும் எனது...

சுதர்சனம், கே வி மகாதேவன், மெல்லிசை மன்னர்கள், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் என்னை மயக்கிய இசைவாணர்கள் திரையில்... 

டி எம் எஸ் முதல் கார்த்தி வரை, சுசீலா முதல் சைந்தவி வரை என பல்வேறு பின்னணி குரல்களும் என்னை மயக்கியது... 

அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் என சில குறிப்பிட்ட கர்நாடக இசைகுயில்களும் என்னை மயக்கியது உண்டு... 

சில உதாரணங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு.... 

கர்ணன் படத்தில் மெல்லிசை மன்னர்கள், ஹிந்துஸ்தானி இசையை புது விதமாய் பயன்படுத்தி அணைத்து பாடல்களையும் ரசிக்க வைத்திருப்பர்... அதிலும் குறிப்பாக "உள்ளத்தில் நல்ல உள்ளம்... " சீர்காழியாரின் குரலில் நடிகர் திலகத்தின் நடிப்பில், கண்ணனை வரும் என் டி ஆர் அவர்களின் தேஜஸ் மிகுந்த முகபாவத்திலும் மிக அருமையாக வந்திருக்கும்... குறிப்பாக "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வஞ்சகன் கண்ணனடா... " மனிதர்கள் நன்றி மறக்க கூடாது என்பதை எவ்வளவு கருத்தாழமிக்க வரிகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்... 

பாரதியின் "எங்கிருந்தோ வந்தான்... " கண்ணன் பாட்டு... கே வீ  மகாதேவன் இசை... படிக்காத மேதை படத்தில்... இப்பொழுதும் இரவுகளில் கேட்டால் கண்ணீர் வரவழைக்கும் பாடல்... பாரதியின் வரிகளுக்கு அப்படி ஒரு நல்லிசை கோர்த்திருப்பார் கே வீ... " நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்... பார்வையிலே சேவகனாய் கண்ணன்... எங்கிருந்தோ வந்தான் இடைஜாதி நான் என்றான்.... இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்... கண்ணன்.... எங்கிருந்தோ.... " என வரும் வரிகளை இப்போது கேட்டாலும் என் கண்ணில் நீர் வரும்.... 

.... தொடரும்....

என் பயணங்கள்.... தொடர்கிறது

இது எனது பணி நிமித்தமான பயண அனுபவம்... சென்ற வருடம் ஜூன் மாதம், திருவனந்தபுரத்திற்கு ஒரு அலுவல் நிமித்தம் பயணம் மேற்கொண்டேன்... தவறான பயணசீட்டு முன்பதிவினால் என் பயணத்தை கோழிக்கோடு வழியாக மேற்கொண்டேன்... அங்குள்ள என் சக ஊழியர் மூலம் கோழிக்கோடு - திருவனந்தபுரம் பயண திட்டம், குருவாயூர் வழியாக  என தயாரானது. கோழிக்கோட்டிலிருந்து குட்டிபுரம் எனும் ஊருக்கு ரயிலில் பயணம்... அடுத்து அங்கிருந்து குருவாயூருக்கு பேருந்து பயணம்... குளியல் முடித்து என் பாலகிருஷ்ணனை காண ஆவலோடு சென்றோம்... கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின் என் இனிய பாலகிருஷ்ணனின் தரிசனம்.... காத்திருந்த களைப்பெல்லாம் நொடியில் மறைந்தது.... பின்னர் திருச்சூர் வந்து அங்கிருந்து திருவனத்தபுரம் பயணம் புறப்பட்டோம்....

ரயில், பேருந்து என இரு வேறு வகை பயணப்பட்டாலும் என் பிரிய கிருஷ்ணனை  பார்த்து மகிழ்ந்த அந்த சில நிமிடங்கள் என்னால் மறக்க முடியாதது....

Saturday, January 22, 2011

நெஞ்சம் மறப்பதில்லை....

நண்பர்களே....

தலைப்பை பார்த்து இது எதோ கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியது என்றோ... அல்லது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் படைப்பான திரைப்படம் பற்றியது என்றோ எண்ணிவிடாதீர்கள்....

இது 27 வயது வரையான என் வாழ்வில், நான் கண்டு வியக்கும் சில சக மனிதர்களை பற்றிய எனது எண்ண ஓட்டம்....

அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..... அப்போது வரை, என்னை பள்ளி வரை விட்டு செல்லும் என் அன்னை எனக்கு பத்து காசு, இருபது காசு கொடுப்பார்கள், தின்பண்டம் வாங்கி திங்க.... ஒரு நாள், வழக்கம் போல பள்ளியில் விட்ட என் அன்னை எனக்கு காசு கொடுக்க மறந்துவிட்டார்.... வகுப்பறை அருகில்வரை சென்ற நான், மீண்டும் ஓடிவந்து காசு வாங்கி சென்றேன்.... இதை எனது ஹிந்தி ஆசிரியர் பார்த்தார்... அவர் வகுப்பு வந்த நேரம், என்னை அழைத்து காலையில் நான் ஏன் அப்படி செய்தேன் என கேட்டார்.... நானும் சொன்னேன்... தேவை இல்லாமல் காசு வாங்குதல் தவறு என்றார்... பின்னர் மறுநாளில் இருந்து நான் காசு வாங்குவதை நிறுத்தினேன்... என் பள்ளிபருவம் முடியும் வரை, என் தேவைகளுக்கு மட்டுமே என் அன்னையிடம் பணம் வாங்கினேன்.... என்னை மாற்றிய அந்த ஹிந்தி ஆசிரியரை என்றும் எனது நெஞ்சம் மறப்பதில்லை....

தொடரும்.....

Tuesday, January 18, 2011

ஜெசிக்காவை யாரும் கொலை செய்யவில்லை... (No One Killed Jessica)

கடந்த ஞாயிறு ஹைதராபாத் ஐநாக்ஸ் திரையரங்கில் நோ ஒன் கில்ட் ஜெசிக்கா (Noone Killed Jessica) எனும் ஹிந்தி திரைப்படம் பார்த்தேன்... ராணிமுகர்ஜி, வித்யாபாலன் என சில அறிந்த முகங்கள்... திரைக்கதை ஓட்டத்தில் இவ்விருவரின் பங்கே அதிகம்.... சமீபத்தில் கூட பரப்பாக பேசப்பட்ட ஜெசிக்கா கொலைவழக்கினை மையமாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டிருந்தது.... சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தியும் , சாட்சிகளை விலை கொடுத்து வாங்கியும் ஒரு கொலையை ஆதாரமற்றதாக அரசியலில் இருக்கும் ஒரு பெரிய புள்ளி மாற்றிவிடுகிறார்.... அது வரை இந்த கொலைவழக்கினை பற்றி பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் செய்தி தொலைக்காட்சி நிருபரான ராணிமுகர்ஜி களத்தில் குதிக்கிறார்.... பின்னர் இந்த வழக்கு எந்த நிலைக்கு செல்கிறது என்பது இரண்டாம்பாதி.... கதையோட்டத்தில் முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், பாரத பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் (அனைவரும் பிற திரைக்கலைஞர்கள் அல்லது பழைய கோப்புகளின் கணினி விளையாட்டு) இவ்வழக்கு பற்றி பேட்டி காண்பது போல் அதுவும் அவர்கள் முகம் காட்டாது அவர்களின் பின்புறமாய் காட்டுவதும் அருமை... ஜெசிக்காவின் அக்கா சப்ரீனா எனும் கதாபாத்திரத்தில் தன்னை முழுவதும் பொருத்தி பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வித்யாபாலன்....

படத்தின் முடிவில், படம் பார்த்த ஒரு நபர், அவர் நண்பரிடம் சொல்கிறார்.... நண்பா, மிக்க நன்றி.... பலநாட்களுக்கு பின்னர் ஒரு மிக அருமையான படம் பார்க்க என்னை அழைத்து வந்தாய்.... நன்றி....

படம் பார்த்த பெரும்பாலோரின் கருத்துக்களும் மேற்சொன்ன கருத்தொற்றியே இருந்தது.... முடிந்தால், நண்பர்களே நீங்களும் ஒருமுறை இப்படத்தை பாருங்கள்...

நன்றி...
உங்கள் அன்பின்
ஆனந்த கிருஷ்ணன் ஞா

Thursday, January 13, 2011

பாரதி

பாரதி..... எட்டயபுரத்து முண்டாசு கவிஞன்.... அவன் இருந்த காலத்திய மூடப்பழக்கங்களை நெஞ்சுரத்தோடு எதிர்த்தவன்.... சமதர்மம் வேண்டியவன்.... சுதந்திர வேட்கை தூண்டியவன்....

ஆனால் இங்கே முன்டாசுகவியின் பெயர் கொண்ட இன்றிருக்கும், என்னை கவர்ந்த சிலரைப்பற்றி எழுத விழைகிறேன்.....

பாலபாரதி - திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் - சிகப்பு சட்டை தோழர்களின் பிரதிநிதி.... தன் தொகுதி மட்டுமல்லாது பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்.... நாவன்மை மிக்க நல்ல பெண்மணி....

பாரதி பாஸ்கர் - தனியார் வங்கி பணி.... சன் டிவி பட்டிமன்றங்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறிமுகம்.... சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் என்றாலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள நல்ல பேச்சாளர்.... பழகுதமிழில் பாமரருக்கும் புரியும் வண்ணம் கருத்துரைக்கும் திறன்மிக்கவர்.... தற்போது சன் டிவியில் வாங்க பேசலாம் என அன்றாட நிகழ்வுகளை திரு. ராஜா அவர்களுடன் அலசுகிறார்.....

இன்னும் வளரும்....

Tuesday, January 11, 2011

என் பயணங்கள்....

இந்த பகுதியில் எனது மறக்க முடியாத சில பயணங்களை பற்றி எழுத விழைகிறேன்... அது 2007 தீபாவளி.... அப்போது சென்னையில் பணி... திட்டமிடாத பயணமாக சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு கிளம்பினேன்.... தீபாவளி நேரம் என்பதால் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன.... கூட்டம் அலைமோதுகிறது கோயம்பேடு பேருந்து நிலையத்தில்... திருச்சி, மதுரை என பிரித்து பயணிக்கலாம் என முடிவெடுத்து திருச்சி பேருந்துக்கு காத்திருந்தேன்... என்னைபோல காத்திருந்த ஒரு நண்பர், என்னிடம் பேச தொடங்கினார்... பேருந்து வந்தது.. நண்பர் அமர இடம் கிடைத்தது.... எனக்கு நிற்க மட்டுமே இடம் கிடைத்தது.... பின்னர் நண்பர் அவருடைய நண்பர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.... நானோ ஆனந்த விகடனில் ஐக்கியம் ஆனேன்... பின்னர் பேருந்து ஓரிடத்தில் நிற்க, தேனீர் பருக இறங்கினோம்... பின்னர் பேருந்தில் அந்த நண்பர் என்னிடம் பேச தொடங்கினார்... சுமார் மூன்று மணி நேரம் பேசினோம்.... பல நாள் பார்த்து பழகியவர்போல ஒரு உணர்வு.... காலையில் திருச்சியில் அவர் இறங்கும்போது அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம்.... அவருக்கு சிவனை தவிர, சைவத்தை தவிர வேறு சமயங்களில் ஈர்ப்பு இல்லை.... எனக்கு சைவம் வைணவம் என எல்லா சமய ஈடுபாடு உண்டு .... குழலிசை மன்னன் கண்ணனின் தீவிர ரசிகன், பக்தன், காதலன் என்றே சொல்லலாம்... அவ்வளவு ஈர்ப்பு கண்ணன்பால்.... நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்.... ஒருமுறை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசிக்க ,சென்றிருந்தேன்.... நண்பரும் அங்கேயே தங்கி இருக்க, நாங்கள் சந்திக்க முடிவு செய்தோம்.... கோயில் உள்ளே நான் தரிசனம் முடித்துவர சுமார் ஒரு மணி நேரம் ஆனது... நண்பரோ, கோயில் வாசலிலேயே எனக்காக காத்திருந்தார்.... பின்னர் சந்தித்தோம்... இப்படியாக எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது....


பயணத்தை விவரிக்கும் சுவாரஸ்யத்தில் நண்பர் பெயர் சொல்ல மறந்துவிட்டேன்... அவர் பெயர் கார்த்திக் குமார்... வேதியியல் சம்பந்தப்பட்ட துறையில் பணியில் இருக்கிறார்.... திருச்சியில் வாசம்....

Monday, January 10, 2011

ஆனந்த கிருஷ்ணன் - அறிமுகம்...

ஆனந்த கிருஷ்ணன்... பிறந்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்.... பிறந்த தேதி 16 / 2 ... இளங்கலை இயற்பியல் பட்டதாரி.... இப்போது ஹைதராபாத்தில் பணி..... புத்தகம், இசை இரண்டிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.... கர்நாடக சங்கீதம் கற்கவில்லை எனினும் ஆர்வம் மிக உண்டு.... சுதாரகுநாதன், அருணாசாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன் நான் ரசிக்கும் குரல்கள்.... திரையிசையில், ஜானகி, வாணி ஜெயராம், ஸ்வர்ணலதா, SPB  பிடிக்கும்.... பழைய திரை பாடல்களை தேடி தேடி கேட்டு ரசிப்பதுண்டு.... நல்ல திரைப்படங்களை பார்ப்பது உண்டு.... முடிந்தவரை திரைஅரங்கில்....  இனி என் எண்ணங்களும், நிகழ்வுகளும், சம்பவங்களும் தொடரும்....

Sunday, January 9, 2011

வணக்கம்

வணக்கம் தோழர்களே!!!

இது எனது புதிய வலைப்பூ பதிவு.... என் எண்ணங்கள், என் வாழ்வின் முக்கிய தருணங்கள், மறக்கமுடியா நிகழ்வுகளின் பதிவுகள் இங்கே இடம் பெற இருக்கின்றன.... முடிந்த வரை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதுகிறேன்...  உங்கள் அனைவரின் கருத்துக்களும் வரவேற்க படுகின்றன....

நன்றி
உங்கள் அன்பின்
ஆனந்த கிருஷ்ணன். ஞா